பாடகர் KK பாடிய கடைசி தமிழ் பாடல்… ‘தி லெஜண்ட்’ பட இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த பாடகர் KK சமீபத்தில் பாடிய பாடலின் வீடியோவை தி லெஜண்ட் பட இயக்குனர்கள் பகிர்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… ரிலீஸ் தேதியுடன் வெளியான சென்சார் தகவல்- Viral Pic

அதிர்ச்சி மரணம்….

பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர்  கிருஷ்ணகுமார் குன்னத், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், எக்கச்சக்க பாடல்களையும் பாடி உள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த KK, நேற்று திடீரென தன்னுடைய 53 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிருஷ்ணகுமார் குன்னத், அங்கே பாடிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையிலே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதே போல, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சக கலைஞர்களின் அஞ்சலி…

KK வின் இந்த திடீர் மறைவு, அவரோடு பணியாற்றிய பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் தங்கள் அஞ்சலிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள KK சமீபத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ…

இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரி,  KK படத்தில் இடம்பெறும் ‘கொஞ்சி கொஞ்சி’ பாடலைப் பாடும் வீடியோவை பகிர்ந்து தங்கள் அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் “மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு. அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம்.

என்ன ஒரு உற்சாகம், ஆர்வம், commitment .. எத்தனை முறை பாடினாலும் energy குறையாத குரல்.. பழகுவதற்கு இனிமை ,பாடலில் தனித்துவம். சந்தித்த சில மணிநேரத்திலேயே ரொம்ப நாள் பழகிய உணர்வைத் தர ஒரு சிலரால்தான் முடியும். எங்களுக்குப் பாட வந்திருந்தாலும் எங்களை ஒரு guest போல கவனித்தது ரொம்ப அபூர்வமான குணம். காலத்திற்கும் காதில் வாசம் செய்யும் பாடலை பாடிய அந்த கலைஞன் இப்போது இல்லை என்பதை நம்ப மறுக்கிறது மனம். வாழ்வின் நிலையாமைச் சொல்லி செல்லும் நாட்கள். எங்களது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறோம்.” என அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Also Read | மாஸ் Stylish லுக்கில் விஜய் சேதுபதி… வைரலாகும் ‘விக்ரம்’ படத்தின் புதிய BTS புகைப்படம்

 

Direcctors JD Jerry shared KK last tamil song recording

People looking for online information on Direcctors JD Jerry, KK, KK last tamil song recording will find this news story useful.