நடிகை ஜான்வி கபூர் தனது வரவிருக்கும் திரைப்படமான 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' படத்திற்காக கிரிக்கெட் முகாமில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ஜான்வியின் 'ரூஹி' படத்தில் உடன் நடித்த ராஜ்குமார் ராவ், மீண்டும் ஜான்வியுடன் நடிக்கும் இந்த படம் ஒரு கிரிக்கெட் டிராமாவாக அறியப்படுகிறது. குடியரசு தினமான 2022 ஜனவரி 26 அன்று, ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிப்பது குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்தார். ஜான்வி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முறையே மகேந்திரா மற்றும் மஹிமா என்ற கேரக்டர்களில் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ படத்தில் நடிக்கின்றனர். ஷரன் ஷர்மா இயக்கத்தில் ஜான்வி நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து மூத்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து வலைப் பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் ஜான்வி பகிர்ந்து கொண்டார். தினேஷ் கார்த்திக், படத்தின் இயக்குனர் ஷரன் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் தனிப் பய்ற்சியாளரும் நெருங்கிய நண்பருமான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் ஆகியோருடன் ஜான்வி இருப்பதையும் காணலாம். இந்த புகைப்படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது என்பதை உறுதிச் செய்கின்றன.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெரும் வரவேற்பு இருப்பதால், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 36 வயதான தினேஷ் கார்த்திக் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 பதிப்பிற்கு தயாராகி வருகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இணைந்திருந்த கார்த்திக் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக KKR உரிமையாளரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு புதிய உரிமையாளர்களான லக்னோ மற்றும் அகமதாபாத் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாததால், DK மெகா ஏலத்தில் இறங்க உள்ளார், மேலும் DK ஒரு நல்ல தொகையைப் ஏலத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதில், கார்த்திக் நிச்சயமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் இருக்கிறார். இருப்பினும், இறுதி ஓவர்களில் விரைவாக அதிர்டியாக ரன்களை எடுக்கக்கூடிய நம்பகமான விக்கெட் கீப்பர் என்பதால் DK-க்கு மவுசு உள்ளது.
அபிஷேக் நாயரைப் பொறுத்த வரையில், அவரும் KKR அணிக்கு உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.