அஜித் நடித்த 'துணிவு'.. படம் பார்த்துவிட்டு ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த தினேஷ் கார்த்திக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படம் குறித்து  இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாத்தி FDFSல் யாத்ரா .. டக்குனு பார்த்தா தனுஷ் மாதிரியே இருக்காருப்பா.. வைரல் வீடியோ

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த  இந்திய கிரிக்கெட் அணி  வீரர் தினேஷ் கார்த்திக் துணிவு படம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார் . தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார்.

அப்போது ரசிகர் ஒருவர், "துணிவு படத்தினை  பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், "சூப்பர் 😍" என படம் குறித்து பதில் அளித்தார்.

Also Read | Life of AK: வெளிநாட்டு சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. எங்க தெரியுமா ? வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Dinesh Karthik DK Tweet about AjithKumar AK Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Dinesh Karthik, Thunivu will find this news story useful.