"தல அஜீத் மாநாடு பார்த்தாரா?" - வெங்கட் பிரபு பதில்!.. "மங்காத்தா-2 & மாநாடு-2".. பிரேம்ஜி கொடுத்த HINT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தை தல அஜீத் பார்த்தாரா என்பது குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

2011-ஆம் ஆண்டு, தல அஜீத், த்ரிஷா, அர்ஜூன், சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், அஷ்வின், மஹத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், வாகை சந்திரசேகர், மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வந்துள்ள மாநாடு திரைப்படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்கில் 2021, நவம்பர் 25-ஆம் தேதி நேரடியாக வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்கும் வெங்கட் பிரபுவின் நேர்த்தியான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மாநாடு படத்தின் செலிபிரிட்டி சிறப்பு காட்சி திரையிடலின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.

அப்போது மாநாடு படத்தை ‘தல’ அஜீத் குமார் அவர்கள் பார்த்தாரா? படத்தை பார்த்துவிட்டும் கருத்தோ, பாராட்டோ கொடுத்தாரா? என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “இல்லை அஜீத் சார் இன்னும் படத்தை பார்க்கவில்லை. வரும் வாரத்தில் படத்தை பார்த்துவிடுவதாக சொல்லியிருக்காங்க.” என்றார்.

மேலும் மாநாடு படத்தின் 2-ஆம் பாகத்தை எதிர்பார்க்கலாமா? என கேட்கப்பட்டபோது, இயக்குநர் வெங்கட் பிரபு சிரித்த முகத்துடன், “எதிர்பாருங்க!” என்றார். அப்போது அருகில் இருந்த நடிகர் பிரேம்ஜி அமரன், “மங்காத்தா பார்ட் 2 வரும் என்று எதிர்பார்ப்பது போல் மாநாடு பார்ட் 2-ஐயும் எதிர்பாருங்களேன்!” என்று கலகலப்பாக பேசினார்.

"தல அஜீத் மாநாடு பார்த்தாரா?" - வெங்கட் பிரபு பதில்!.. "மங்காத்தா-2 & மாநாடு-2".. பிரேம்ஜி கொடுத்த HINT! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Did thala ajith seen simbus maanaadu venkat prabhu byte video

People looking for online information on Maanaadu, Maanaadu Tamil, Silambarasan TR, Suresh Kamatchi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.