கல்லூரி மாணவர்கள் கல் வீச்சா? தர்பார் ஷூட்டிங்கில் பரபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இணைந்து நடித்து வரும் ‘தர்பார்’ திரைபப்டத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கல்லூரி மாணவர்கள் கல் வீசியதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவேதா தாமஸ், யோகிபாபு, ஜத்தின் சர்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படத்தின் முக்கிய காட்சிகள் சில படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்கான நிலையில், படக்குழுவினர் அதனை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் போட்டிருப்பதாக கூறப்பட்டன.

இந்நிலையில், கல்லூரியில் நடந்த ஷூட்டிங்கை காண குவிந்த மாணவர்களை படக்குழுவினர் தடுக்க முயற்சித்ததாகவும், மாணவர்கள் கல் வீசி தாக்கியதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வித இடையூறும் இன்றி ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் சுமூகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Did College students pelted with stones over Rajinikanth's Darbar crew?

People looking for online information on AR Murugadoss, Darbar, Lyca Productions, Nayanthara, Rajinikanth will find this news story useful.