D50 படத்தில் தனுஷூக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை.. இவங்களா? ஆஹா செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி?.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்..? போடு செம்ம

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ்,   வாத்தி & கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் - தெலுங்கில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்றும் தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்

வாத்தி படத்தை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் துஷாரா விஜயன், மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

பின்னர் துஷாரா, 'நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே என்ற நவநாகரீக பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read | Priya bhavani shankar : புதுவீட்டை தொடர்ந்து சொந்த ரெஸ்டாரன்ட் .. அசத்தும் பிரியா பவானி சங்கர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Dhusara Vijayan roped as a female lead in Dhanush`s D50 Deets

People looking for online information on D50, Dhanush, Dhusara Vijayan will find this news story useful.