பா.இரஞ்சித் - மாரி செல்வராஜ் - த்ருவ்.. மாஸ் கூட்டணியில் செம படம்.!!! வைரலாகும் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் த்ருவ் விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான நடிகர் விக்ரமின் மகனான த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். 

இந்நிலையில் அடுத்து த்ருவ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். 

த்ருவ் மற்றும் மாரி செல்வராஜ் இதுகுறித்து சந்தித்ததோடு, அவர்களின் போட்டோவையும் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கும் த்ருவ் | Dhruv vikram's next film director announced photo goes viral

People looking for online information on Dhruv, Mari Selvaraj, Pa Ranjith will find this news story useful.