''அப்பா...'' - விக்ரம் குறித்து துருவ் விக்ரம் உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் 'ஆதித்யா வர்மா'. இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Dhruv Vikram Emotional statement about his Father Vikram

இந்த படத்தை ஈ4 எண்டர்டெயிமென்ட் இந்த படத்தை தயாரிக்க, கிரீசாயா என்பவர் இந்த படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்துக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், என்னை சிறப்பானவற்றை நோக்கி ஒவ்வொரு நாளும் தள்ளுகிறீர்கள். என்னை நம்பிக்கை இழக்க விடமாட்டீர்கள். ஆதித்யா வர்மாவில் எப்பொழுதும் என் பின் நின்று கொண்டு உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் எனக்கு கத்துக்கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகி இருக்காது.

ஒருவர் என்னிடம் டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். பின்னர் அவர் தெரிந்திருப்பார் எந்த அளவுக்கு உங்கள் பங்களிப்பு இந்த படத்தில் இருக்கிறது என்பதை. நான் சொன்னேன் என் வலது பக்கம் இருக்கிறது. நான் செய்யும் ஒவ்வொன்றிலும் அது இருக்கிறது. தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா. உங்களை பெருமைப்படுத்துவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

Dhruv Vikram Emotional statement about his Father Vikram

People looking for online information on Adithya Varma, Dhruv, Vikram will find this news story useful.