பிரபல OTT க்கு நடிகைகள் பார்வதி - பிரியா பவானி சங்கர் நடிக்கும் அமானுஷ்ய HORROR வெப் சீரிஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரம் குமார்.

Advertising
>
Advertising

பின் 13B, யாவரும் நலம், மணம், கேங் லீடர், 24 போன்ற படங்களை இயக்கியவர். இவரின் வித்தியாசமான வகைமை படங்களுக்காகவே இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரின் திரைமொழி, கதை சொல்லும் விதம் இந்திய சினிமாவில் புகழ் பெற்றது.

தற்போது புதிய தெலுங்கு Web Series ஒன்றை இயக்கும் முனைப்பில் விக்ரம் குமார் உள்ளார். இந்த படத்திற்கு கதாநாயகிகளாக மலையாள நடிகை பார்வதி நடிக்க உள்ளார். இவருடன் மற்றொரு நடிகையாக பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளார். பார்வதி ஏற்கனவே தமிழில் மரியான், பூ, உத்தம வில்லன் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் கவனிக்கப்படும் முன்னணி நடிகையாகவும் செயல்படுகிறார்.

இந்த தொடரில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் குமாரின் 'மணம்' படத்தில் நடித்தவர். இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்ஸ்டாகிராமில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு DHOOTHA என பெயரிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் இந்த தொடர் வெளியாக உள்ளது. நார்த் ஸ்டார் எண்டெர்டெயிண்மெண்ட் இந்த தொடரை தயாரிக்கிறது. 

சூப்பர் நேஷ்சுரல் ஹாரர் வகைமையில் இந்த தொடர் உருவாக உள்ளது. 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

பிரபல OTT க்கு நடிகைகள் பார்வதி - பிரியா பவானி சங்கர் நடிக்கும் அமானுஷ்ய HORROR வெப் சீரிஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhootha Parvathy Priya Bhavani Shankar Vikram Kumar

People looking for online information on Amazon Prime Video, Dhootha, Naga chaitanya, OTT, Parvathy, Priya Bhavani Shankar, Vikram K Kumar, Web Series will find this news story useful.