DHOKHA: ROUND D CORNER: GLASS-ஐ உடைத்து எண்ட்ரி.. மாதவன் & படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "DHOKHA: Round D Corner" திரைப்படம்.

Advertising
>
Advertising

Also Read | ராக்கெட்ரி படம் லாபமா? மாதவன் வீட்டை இழந்துட்டாரா? வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த மாதவன்!

கூகி குலாட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மாதவன், அபர்ஷக்தி குரானா, தர்ஷன் குமார் மற்றும் அறிமுக நடிகை குஷாலி குமார் நடித்துள்ளனர். இதில் கணவன் மனைவியாக மாதவன் மற்றும் குஷாலி குமார் நடித்துள்ளனர்.

இவர்களுக்குள் பிரச்சனை என்ன? மாதவனை விட்டுச்செல்லும்  குஷாலி குமார் அபர்ஷக்தி குரானாவிடம் மாட்டிக் கொள்கிறாரா? அல்லது அபர்ஷக்தி குரானா, குஷாலி குமாரிடம்  மாட்டிக்கொள்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இருவரிடமும் துப்பாக்கி மாறி மாறி கைமாறுவதை டீசரில் காண முடிகிறது.  இதில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் தர்ஷன் குமார் நடித்துள்ளார்.

மேலும் டீசரில், “என் கணவர் சொல்வதையே அனைவரும் உண்மை என நம்புகிறார்கள். நான் சொல்லும் உண்மையை யாருமே கவனிப்பது இல்லை” என ஒரு குரல் இடம் பெறுகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் அறிமுக விழாவில் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் கலந்துகொண்ட குஷாலி குமார், “இந்த போஸ்டரில் இருப்பது நான் தான் என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. கனவு உண்மையாகி இருக்கிறது என்பதுதான் நிஜம்.!” என்று பேசியதுடன், ஆர்.மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிப்பது என்பது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மாதவன் உள்ளிட்ட இப்படத்தின் முக்கிய பிரபலங்கள் எண்ட்ரி கொடுக்கும்போது கிளாஸை உடைத்துக்கொண்டு எண்ட்ரி கொடுத்தது போலன செட்டப்கள் அமைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள "DHOKHA: Round D Corner" எனும் இந்த ஹிந்தி திரைப்படத்தை  தயாரித்துள்ளனர்.

Also Read | SS ராஜமௌலியின் பட்டறையின் அடுத்த பிரம்மாண்டம்.. பான் இந்திய படமாக உருவாகும் '1770'

தொடர்புடைய இணைப்புகள்

DHOKHA: Round D Corner teaser madhavan and actor entry

People looking for online information on DHOKHA, Madhavan, Round D Corner will find this news story useful.