பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சென்னையில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடி பெர்ஃபார்ம் பண்ணியிருந்தார்கள்.
ஆனால் இந்த நிகழ்வில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு தோன்றாதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் சலசலக்கத் தொடங்கியது, இந்நிலையில் இது தொடர்பாக தெருக்குரல் அறிவு பதிவிட, அதற்கு சந்தோஷ் நாராயணன் விளக்கமும் அளித்தார்.
அதன்பின், தற்போது பாடகி ‘தீ’ சமூக வலைதளபக்கத்தில் ஒரு விளக்க பதிவினை பகிர்ந்துள்ளார்.
Also Read | "அறிவின் குரல் ஓங்கி ஒலிக்கவே விரும்பினேன்" - என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை.. பாடகி தீ விளக்கம்.!
இதேபதிவில், கடந்த ஆண்டு நடந்த ரோலிங் ஸ்டோன் இதழில் அறிவின் பெயர் இடம்பெறாததால் உண்டான சர்ச்சை குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தீ-யின் தற்போதைய பதிவில், “வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். அது நாங்கள் இணைந்துள்ள (தீ மற்றும் ஷான்) அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படம்தான். மற்றபடி, அது என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒலி பாடலுக்கானதோ இல்லை. அந்த பாடல் பெயர்கள் அந்த அட்டைப் படத்தில் குறிப்பிடப் படவும் இல்லை.
இதேபோல், அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் majja கலைஞர்கள் குறித்த கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் இதை அறிவித்தது கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Also Read | ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் .. வைரலாகும் ‘தெருக்குரல்’ அறிவு & சந்தோஷ் நாராயணனின் பதிவுகள்.!