ஹீரோயினாக முதல் படத்தின் டப்பிங்கில் குக் வித் கோமாளி தர்ஷா!! உற்சாக POST.. குஷியில் FANS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

அண்மையில் தான் தர்ஷா குப்தா தமது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்கள் வந்ததை கொண்டாடும் வகையில் ரசிகர்களை  அழைத்து அனைவருக்கும் நன்றி சொன்னதுடன் அவர்களுடன் கொண்டாடினார். 

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் சேர்ந்து தர்ஷாவின் காம்போவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா, ருத்ர தாண்டவம் எனும் படத்தில் , நாயகன் ரிச்சர்டு ரிஷியுடன் இணைந்து நாயகியாக நடிக்கிறார். 

இப்படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த தர்ஷா குப்தா இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போது, “ருத்ரா தாண்டவம் டப்பிங் முடித்துவிட்டேன். ஹீரோயினாக இது என் முதல் படம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என பதிவிட்டுள்ளார்.                                                                        

ALSO READ: லாக்டவுனில் பிக்பாஸ் ஷுட்டிங்!!.. சென்னையில் அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு!

Dharsha gupta dubbing for her first movie as heroine viral

People looking for online information on Dharsha Gupta, Rudrathandavam will find this news story useful.