நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் நாளை (டிச.6) வெளியாகவுள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான், திகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில், சஞ்சய் பாரதி மற்றும் ஹரிஷ் கல்யாண் மீண்டும் புதிய திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் திரைப்படத்திற்காக சஞ்சய் பாரதி மற்றும் ஹரிஷ் கல்யாண் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.