வெற்றிமாறன் இயக்கிய ஆசுரனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இவர் நடித்த டி40 திரைப்படம் தற்போது பின்னணி வேலைகளில் உள்ளது.
இதையடுத்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அசுரன் படத்தை ’நாரப்பா’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்காள். இதில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க, நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அசுரனை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுவே தெலுங்கில் ’நாரப்பாவை’ சுரேஷ் பாபு என்பவரோடு இணைந்து தயாரிக்கிறார்.
இந்நிலையில் ஏற்கெனவே தனுஷ் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான ’பட்டாஸ்’ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தெலுங்கில் ’லோக்கல் பாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.