பிரபல ஹீரோ, புதிதாக பிறந்த தனது மகனுடனான போட்டோவை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மலையாள சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த வைரஸ், லுசிஃபர், தீவண்டி, மரடோனா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவர் தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்னர், இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது டொவினோ தாம்ஸ் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து, புதிதாக பிறந்த தன் மகனை ஆசையுடன் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர், ''கண்களை எடுக்க முடியவில்லை. இவனுக்கு டஹான் டொவினோ என பெயரிட்டுள்ளோம். ஹான் என்று கூப்பிடுகிறோம். உங்கள் வாழ்த்துக்களுக்கு அன்புக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.