மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணிக ரீதியிலும் கலை ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் கர்ணன் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சர்வதேச வெளியீட்டின் படி, தற்போது OTTயில் ஒளிபரப்பாகும் படங்களில் மிகச்சிறந்த ஐந்து படங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய படமாக கர்ணன் இடம்பிடித்துள்ளது. கர்ணன் தவிர பட்டியலில் உள்ள மற்ற படங்கள் The Father Who Moves Mountains, Koshien: Japan’s Field of Dreams, I Never Climbed the Provincia & The Cloud in Her Room ஆகியன ஆகும்.
தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம், மாறன் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அத்ரங்கி ரே படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.