தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் விமர்சனம் மற்றும் விமர்ச ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' திரைப்படம் கடந்த (அக்.4)ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக கூட்டணி அமைத்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி ‘அசுரன்’ படத்தில் அசுரத்தனமான வெற்றியை பெற்று வருகிறது.
இப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதையடுத்து, படக்குழுவினர் அசுரன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் ஆகியோரின் வரிசையில் தற்போது தனுஷும் இணைந்துள்ளார். பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் தனுஷின் முதல் படம் ‘அசுரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.