இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்..!
'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுடன் பணிபுரிகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது.
இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற்று வருகிறது.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தன்னுடைய டிவீட்டில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா" என தனுஷ் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். இந்த டிவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் இரண்டு புதிய படங்களின் தகவல் அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதில் ஒரு படமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர் இது தான்! போஸ்டருடன் வெளியான சூப்பர் தகவல்