DHANUSH : "வாழும்போதே தாய் தந்தையை சொர்க்கத்தில் வாழவைக்கிறார்".. தனுஷின் புது வீடு.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாவார். இயக்குநர் செல்வராகவனின் தம்பி ஆவார்.

Advertising
>
Advertising

விடாமுயற்சி மற்றும் சொந்த திறன் வழியாக நடிகராக பல படங்களில் நடித்த தனுஷ், தேசிய விருதும் பெற்றவர். தமிழ் மட்டுமல்லாது, தென்னிந்திய, இந்தி, ஆங்கில படங்கள் வரை நடித்து புகழ்பெற்றுள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடல், இயக்கம், எழுத்து என பல பரிமாணங்களில் இயங்கும் தனுஷ் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படங்கள் வெளியாகின.

இதில் வாத்தி, நடிகர் தனுஷின் அண்மைக்கால படமாக திரையரங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிலையில் நடிகர் தனுஷ் தமது புதிய வீட்டில் பெற்றோருடன் குடிபோனது குறித்த பதிவினை புகைப்படங்களுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான சுப்ரமணியம் சிவா பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான தமது பதிவில், “தம்பி தனுஷின் புதிய வீடு… கோவில் உணர்வு எனக்கு..😊 வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்…😊 மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்..💕 இன்னும்பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க..” என்று சுப்ரமணியம் சிவா குறிப்பிட்டுள்ளார். 

தனுஷின் இந்த வீடு போயஸ் கார்டனில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தனுஷின் தந்தை மற்றும் தாயாருடன் தனுஷ் இடம்பெறும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush went to new house viral pics நடிகர் தனுஷ் புதுவீடு

People looking for online information on Dhanush, Dhanush New home, Dhanush new home pics, Dhanush new home trending will find this news story useful.