காந்தாரா படம் பார்த்த பிறகு நடிகர் தனுஷ், படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Also Read | வெங்கட் பிரபு & நாக சைதன்யாவின் புதிய படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்கள்!
கன்னட மொழியில் உருவாகிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று வெளியானது.
காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.
இது உலகளாவிய கருப்பொருளாக இருப்பதால், படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.
காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
மிக விரைவில், இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் வெளியிடப்படவுள்ளது. கேஜிஎஃப் திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஹொம்பாலே பிலிம்ஸின் இரண்டாவது தமிழ் டப்பிங் வெளியீடான காந்தாராவின் தமிழ் வெளியீட்டு தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் காந்தாரா படத்தின் தமிழ் மொழி டிரெய்லர் வெளியாகியது. இந்த தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் தனுஷ் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், "காந்தாரா.. பிரமிப்பு!! கண்டிப்பாக பாருங்கள்.. ரிஷப் ஷெட்டி உங்களை நினைத்து பெருமைப்படுங்கள். வாழ்த்துகள் ஹோம்பலே பிலிம்ஸ்..எல்லைகளை மறு வரையறை செய்து கொண்டே உள்ளீர்கள். படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் & நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள்." என தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
Also Read | விஜய் ரசிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி சொன்ன சூப்பர் தகவல்! தியேட்டர் தெறிக்க போகுது