மத்திய அரசின் 67வது தேசிய விருதுகள் வழங்கப்படும் அறிவிப்புகள் நேற்றைய தினம் வெளியானது.
இதில் சிறந்த மாநில மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்துக்கும், அதனைத் தொடர்ந்து அப்படத்தில் நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகராகவும் 2 தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை பெறுகிறார். இந்நிலையில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்கிற ஒரு தகவல் தெரியவந்துள்ளது.
ALSO READ: அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது. முன்பே சொன்ன சிவகார்த்திகேயன்!
அந்த பள்ளியின் தாளாளரும் முதல் மரியாதை மற்றும் சமீபத்தில் வெளியான கேர் ஆஃப் காதல் உள்ளிட்ட படங்களின் மூலம் புகழ் பெற்றவருமான நடிகர் தீபன் இதுபற்றிய தகவலை வெளியிட்டு இருவரும் தேசிய விருது பெற்றதற்கான வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த வீடியோவில், ‘எம்ஜிஆர் தொடங்கிய தாய் சத்யா பள்ளியில் படித்த மாணவர்களான தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் பள்ளி தாளாளர் என்கிற முறையிலும் பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்ஜிஆர் துவங்கிய இந்த பள்ளியில் படித்த இந்த மாணவர்கள் இருவரும் ஒரே வருடத்தில் தேசிய விருதினை பெற்று சாதனை படைத்துள்ளனர். எம்ஜிஆர் இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதற்கு நிகராக மாணவர்கள் வாழ்த்தி வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.