தனுஷ் & வெற்றிமாறன் ரிலீஸ் செய்த.. கென் & ப்ரீத்தி ஷர்மாவின் ‘வாடா ராசா’.. புழுதி பறக்கும் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்து புகழ் பெற்றவர் கென் கருணாஸ்.

dhanush vetrimaaran releases ken karunas vaada raasa song

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகனான கென் கருணாஸ் தற்போது தனது நண்பர் ஈஷ்வருடன் இணைந்து எழுதி, இசையமைத்து உருவாகியுள்ள வீடியோ பாடல் ‘வாடா ராசா’.

dhanush vetrimaaran releases ken karunas vaada raasa song

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ள இந்த பாடலில் கென் கருணாஸ் வேட்டியுடன் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இந்த பாடலில் கென் கருணாஸூடன், பிரபல சித்தி-2 நடிகை ப்ரீத்தி ஷர்மா முதன்மை நாயகியாக நடனம் ஆடி நடித்துள்ளார்.

தி ரூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடல் சோனி மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ளது.  ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிப்பில் குட்டி பட்டாஸ் பாடலை இயக்கிய, இயக்குநர் வெங்கி இந்த பாடலை இயக்க, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த பாடலை இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷூம் தங்களது சமூக வலைதளங்களின் மூலம் ரிலீஸ் செய்துள்ளனர்.

Also Read: ஷாக் ஆன ரசிகர்கள்.. முடிவுக்கு வந்த “பிரபல” ஜீ தமிழ் சீரியல்! நடிகர்கள் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush vetrimaaran releases ken karunas vaada raasa song

People looking for online information on Dhanush, Ken Karunas, Preethi Sharma, VaadaRaasa, Vetrimaaran will find this news story useful.