தனுஷ் நடித்த 'வாத்தி'.. உலகளவில் நடத்திய வசூல் வேட்டை.. மொத்தம் இத்தனை கோடியா! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Sir Movie Worldwide Box Office Collection 118 Cr
Advertising
>
Advertising

தனுஷ் நடித்துள்ள தமிழ் - தெலுங்கு இருமொழி திரைப்படம் 'வாத்தி'.
கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த  படம் தெலுங்கில் சார் (Sir) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

வாத்தி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 51 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

இந்நிலையில் வாத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் 118 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாத்தி தயாரிப்பு நிறுவனமான நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனமும், நடிகர் தனுஷூம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Tags : Dhanush, Vaathi

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Sir Movie Worldwide Box Office Collection 118 Cr

People looking for online information on Dhanush, Vaathi will find this news story useful.