தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்? போடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமம் குறித்த அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் சிங்கிள்  "வா வாத்தி" என்ற பாடல் ஸ்வேதா மோகன் குரலில் சிலநாட்களுக்கு முன் வெளியானது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லலித் குமார், தற்போது வாரிசு படத்தினை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் தனுஷ் நடிப்பில் அடுத்து தயாராகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Sir Movie Tamilnadu Theatrical Rights

People looking for online information on Dhanush, Sir, Vaathi, Varisu will find this news story useful.