'வாத்தி' படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இது தான்.. மனம் திறந்த சம்யுக்தா மேனன்! EXCLUSIVE அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது. 

Advertising
>
Advertising

இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இதற்கான ஆரம்ப பட பூஜை ஜனவரியில் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடுவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா மேனன் கலந்து கொண்டுள்ளார்.

அதனை முன்னிட்டு பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் வாத்தி படம் பற்றியும், தனுஷ் பற்றியும் பேசியுள்ளார். அதில் தனுஷ் & சம்யுக்தா மேனன் இருவரும் பள்ளி ஆசிரியர்களாக நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனுஷ் ஒரே டேக்கில் காட்சிகளை நடித்து விடுவதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ், தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

'வாத்தி' படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இது தான்.. மனம் திறந்த சம்யுக்தா மேனன்! EXCLUSIVE அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Sir Movie Exclusive Update from Samyuktha Menon

People looking for online information on Dhanush, Samyuktha Menon, Sir, Vaathi will find this news story useful.