தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

Also Read | K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 .. படத்தில் இணைந்த பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர்!
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் G V பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தனுஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், வாத்தி பாடல் பதிவு நடக்கிறது… சில கடினமான நடனம் வர இருக்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.
கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இதற்கான ஆரம்ப பட பூஜை ஜனவரியில் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் தனுஷ், தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Also Read | பிரபல PHOTOGRAPHER & COSTUME டிசைனருடன் சேர்ந்து பிரியங்கா மோகன் நடத்திய PHOTOSHOOT! வைரலாகும் PHOTOS