சரஸ்வதி தேவி முன் தனுஷ்.. பிறந்தநாளில் ரிலீசான 'வாத்தி' போஸ்டர்! செம்ம கெத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நான் ஏதோ பெருசா சாதிச்சுட்டேன்னு சொல்றாங்க".. பிரபுதேவா பட சீனையே ரீல்ஸ் செய்த வரலஷ்மி.!

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்

ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை அறிவிக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், கல்லூரி கதைக்களத்தில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்பதையும் பறைசாற்றியது.

அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சார் / வாத்தி படத்தின்  இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் சரஸ்வதி சிலையின் முன்பாக தனுஷ் தனது கையை உயர்த்தி நிற்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது.

நேற்று முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டீசர் இன்று தனுஷின் பிறந்தநாள் முன்னிட்டு (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

'வாத்தி' படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read | அஜித்தை பார்க்க கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்.. அஜித்தின் செயலால் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie Second Look Poster Released

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Movie, Vaathi Movie, Vaathi Movie Second Look Poster will find this news story useful.