தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. வெளியான CLASS-ஆன ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Movie First Look Poster Released
Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை வேதிகா.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Vacation Photos

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.  இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.

தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு  முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் 39 வது பிறந்தநாள் நாளை ஜூலை 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாத்தி படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று ஜூலை 27 ஆம் தேதி வெளியாகி  உள்ளது.

இந்த போஸ்டரில் தனுஷ் மேஜையில் அமர்ந்து ஒரு விளக்கின் ஒளி வெளிச்சத்தில் புத்தகம் படிப்பது போலவும் பின்னணியில் புத்தகங்கள் அலமாரியில் இருப்பது போலவும் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் சிவம் சி கபிலன் வடிவமைத்துள்ளார்.

நாளை பிறந்தநாள் அன்று (ஜூலை 28 ஆம் தேதி) படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன.

திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்.. இதுக்கு தான் வந்திருக்காரா? முழு தகவலுடன் வைரல் ஃபோட்டோஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie First Look Poster Released

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Movie, Vaathi Movie, Vaathi Movie First Look Poster will find this news story useful.