2019 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. நாட்டிங்ஹாமில் நடந்த 10 வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை பத்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய போட்டியின் 5 ஓவரில் 5 வது பந்தில் கிரிஸ் கெயிலுக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் அதற்கு முதல் பந்தை ஸ்டார்க் நோ பாலாக வீசினார்.
அதன் படி அடுத்த பாலுக்கு ஃபிரீ ஹிட் கொடுத்திருக்கவேண்டும். ஃபிரீ ஹிட் கொடுத்திருந்தால் கெயில் அவுட் ஆனது தவறாக ஆகியிருக்கும். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தனுஷ் நக்கலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 'அம்பயர் சந்தோஷமா இருப்பாருனு நம்புறேன். இவர் எப்பொழுதும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறவிடவில்லை. வாழ்த்துகள் அம்பயர் அவர்களே.
நன்றாக விளையாடினீர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியினரே. அம்பயர் தவறான தீர்ப்புகள் வழங்கியதில் இது தான் உச்சகட்டம். ஒரு தலைப் பட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.