"அவருக்கு SUPER STAR ஆகுற திறமை இருக்கு.." - SK குறித்து தனுஷ் சொன்னது என்ன? - மனம் திறந்த வெற்றிமாறன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷின் 44 வது படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Dhanush told SK is a super star potential, Says Vetrimaaran
Advertising
>
Advertising

இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்திற்கு  ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒருநாள் தனுஷ் என்னை அழைத்து, சார் உங்க அசிஸ்டண்ட்ஸ் யாராவது இருந்தா எனக்கு காமெடி கதை சொல்ல சொல்லுங்க என்றார். உடனே நான் காமெடி படம் பண்ண போறீங்களா? என்றேன்.

உடனே அவர், இல்ல சார்.. எனக்கு இல்ல.. சிவகார்த்திகேயனுக்கு.. அவர் பயங்கரமான டேலண்ட் சார், சூப்பர் ஸ்டார் ஆவதற்கான எல்லா ஆற்றலும் அவரிடம் இருக்கிறது என்று சொன்னார். அப்படியானவர் தனுஷ், அந்த நம்பிக்கை ஒருவர் மீது இருந்தால் அதை சாத்தியமாக்கவும் செய்வார் தனுஷ். ” என்று பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush told SK is a super star potential, Says Vetrimaaran

People looking for online information on Dhanush, Sivakarthikeyan, Thiruchitrambalam, Thiruchitrambalam Audio Launch Vetrimaaran Speech, Vetrimaaran will find this news story useful.