தனுஷ் நடிக்கும் "திருச்சிற்றம்பலம்".. டிரெய்லர் எப்போ? பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Trailer out on 7th August 7pm
Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. 'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

Dhanush Thiruchitrambalam Trailer out on 7th August 7pm

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் ஞாயிறன்று (07.08.2022) இரவு 7 மணிக்கு வெளியாகும் என பிரியா பவானி சங்கர் தோன்றும் வீடியோவை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Trailer out on 7th August 7pm

People looking for online information on Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna will find this news story useful.