திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த பின் இயக்குனர் மாரி செல்வராஜ் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
Also Read | ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி.. ரசிகர்களுடன் செல்ஃபி! வைரல் ஃபோட்டோஸ்
நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படம் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்கள் விசில் சத்தமும் ஆரவாரமான கைதட்டலுக்கு மத்தியில் திருச்சிற்றம்பலம் படம் கோலாகலமாக வெளியானது. தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சில பகுதிகளில் காலை 10:30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மனதைக் கவரும் படம், இந்த அப்பா மகன் கதை அன்பான அன்பைத் தூண்டுகிறது மற்றும் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கிறது. இந்த அனுபவத்திற்கு நன்றி. இது ஒரு மகிழ்ச்சியான படைப்பு தனுஷ் சார். திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துக்களும் அன்பும்" என கூறி ட்வீட் செய்துள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.
மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.
Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!