தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது
கடந்த 2008 ஆம் ஆண்டு ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல தமிழ் படங்களை தயாரித்து விநியோகித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin). அதில் குருவி (Kuruvi), மன்மதன் அன்பு, ஏழாம் அறிவு போன்ற படங்களும் அடக்கம், இது போக பேட்ட (Petta), மங்காத்தா (Mankatha) படங்களை வினியோகம் செய்துள்ளது ரெட் ஜெயண்ட்.
சமீபத்தில் அண்ணாத்த, FIR, ராதே ஷ்யாம், எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை சமீபத்தில் விநியோகம் செய்தது. அடுத்து வரவிருக்கும் டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களை விநியோகம் செய்ய உள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரத்யேகமாக நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பெறும், அதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படம் ரெட் ஜெயன்ட் மூலம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/