சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | Thalapathy66: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் நடிகை!
நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் Exclusive தகவல்களை நமது BEHINDWOODS சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், ரெட் ஜெயண்ட் மூவிசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தின் படி சன்பிக்சர்ஸ் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடும் என்றும் கூறியுள்ளார். மேலும் திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகி வருவதாகவும், அந்த தேதியை 'லாக்' செய்யுமாறு சன்பிக்சர்ஸ் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து 'நானே வருவேன்' படத்திலும், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8