தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சன்பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் போஸ்டர்! எப்படி இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ரசிகருக்காக இலியானா பகிர்ந்த வைரல் பிகினி போட்டோ.. 8 வருசமா பாதுகாத்து இருக்காங்க

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுஷின் பின்புறமும், தனுஷின் தலைக்கு மேல் இளையராஜா புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இனிவரும் நாட்களில் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

விரைவில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம், கடந்த 2021 ஏப்ரலில் ரிலீசானது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகின.

Also Read | பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் பார்வதி நாயர்.. புதிய கிரைம் Thriller படத்தின் சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Latest Poster Released

People looking for online information on Dhanush, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Latest Poster will find this news story useful.