தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'.. கேரள உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் கேரள வினியோக உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆஹா.. இயக்குநர் பாக்யராஜ்.. சீரியலில் சிறப்பு எண்ட்ரி .. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா.?

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்துள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தனது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய மலையாள போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Also Read | "இந்த டிரெஸ்ல அப்படியே எங்கே அம்மா மாதிரி இருக்கேன்".. அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Kerala Theatrical Rights Bagged by Magic Frames

People looking for online information on Dhanush, Magic Frames, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Updates will find this news story useful.