தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நடிகையுடன் காதலா..?.. Break up ஆயிடுச்சு.!" .. ரியாலிட்டி ஷோவில் போட்டுடைத்த 'சீரியல்' நடிகர்.!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்துள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் படம் சென்சாராகி உள்ளது. சென்சார் போர்டு இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. பெற்றோர் மேற்பார்வையுடன் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் இப்படத்தினை காணலாம் என‌ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. தாய் கிழவி பாடலின் தனுஷ் ஸ்டில் போஸ்டரில் அமைந்துள்ளது.

Also Read | இது வேற லெவல்! பெங்காலி மொழியில் சாய் பல்லவி நடித்த தமிழ்ப்படம்.. சூப்பர் சம்பவம்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Censored CBFC UA

People looking for online information on Dhanush, Dhanush Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie will find this news story useful.