தனுஷ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்.. BTS புகைப்படங்களுடன் வெளியான LATEST அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் தனுஷ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் BTS போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்ட'ROCKY' படத்தின் செம்ம ரிலீஸ் அப்டேட்..!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். நித்யா மேனன், ராக்ஷி கண்ணா,  பிரியா பவானி சங்கர் பங்கேற்கும் காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

இந்நிலையில் இந்த படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகள் எடுக்கப்பட்டது போல தெரிகின்றன.

இந்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து 'நானே வருவேன்' படத்திலும், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

Also Read | வடிவேலுவின் தாறு மாறு moves… ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த கொல மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie BTS Images goes Viral

People looking for online information on Dhanush, Dhanush Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Updates will find this news story useful.