நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். நித்யா மேனன், ராக்ஷி கண்ணா பங்கேற்கும் காட்சிகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் பிரியா பவானி சங்கர் பங்கெடுக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் கருணாஸ் மற்றும் அவருடைய மகன் கென் கருணாசுடன் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கருணாசும், அவருடைய மகனும் இந்த படத்தில் பணியாற்றுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
கென் கருணாசுக்கு தந்தையாக அசுரன் படத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.