'திருச்சிற்றம்பலம்' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரசிகர்களுடன் சேர்ந்து 'விருமன்' படம் பார்த்த விஜய் மனைவி சங்கீதா.. வைரல் வீடியோ!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் கேரளா உரிமத்தை பிரபல மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.‌தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி கைப்பற்றி உள்ளார். இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல பிரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

 

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam America Release Rights Prime Media

People looking for online information on Dhanush, Prime Media, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Updates will find this news story useful.