இந்தா வரப் போகுதுல்ல.. தி கிரே மேன் 2-ஆம் பாகம்.. இது தனுஷ் ஹாலிவுட் பட யுனிவர்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ், நடிப்பு திறனால், அடுத்தடுத்து சிறந்த படைப்புகளில் நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட்டில் தொடங்கி தற்போது சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்திருந்தார்.

Advertising
>
Advertising

அண்மையில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிப்பில், 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில், "தி கிரே மேன்" என்கிற ஹாலிவுட் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'தி கிரே மேன்' திரைப்படம் நேரடியாக வெளியானது. இதனைத் தொடர்ந்து தி கிரே மேன் 2-ஆம் பாகம் வரவிருக்கிறது. இதில் The Lone Wolf என்கிற தனுஷின் கேரக்டரை மையமாக வைத்து 'தி கிரே மேன்' 2 வரவிருக்கிறது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள தனுஷ், “தி கிரே மேன் யுனிவர்ஸ் விரிவடைகிறது. அதன் அடுத்த பாகமும் வருகிறது. Lone Wolf தயார். நீங்களும் தயாரா?"? என குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் மல்டிவர்ஸ் சினிமாக்களை அதிகம் காண முடிகிறது. அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மல்டிவெர்ஸ் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது தனுஷ் நடிப்பிலான தி கிரே மேன் படத்தின் யுனிவர்ஸூம் விரிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush the gray man part 2 The Lone Wolf universe

People looking for online information on Dhanush, The Gray Man will find this news story useful.