இளையராஜா கச்சேரியில் தனுஷ் தம் மகன்களுக்காக மனமுருகி பாடிய தாலாட்டு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது மகன்களோடு இளையராஜாவின் ராக் வித் ராஜா கச்சேரியில் கலந்து கொண்டு பாடியுள்ளார்.

Dhanush Sung Lullaby song for his sons at Ilaiyaraaja concert
Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்து ஜனவரியில் ஒரு பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

Dhanush Sung Lullaby song for his sons at Ilaiyaraaja concert

"18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.

இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.

பின் தனுஷ் வாத்தி, நானே வருவேன்  படங்களில் பிஸியானார். சில நாளுக்கு முன் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த கச்சேரியில் தனுஷ் மகன்களோடு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனது மகன்களை நினைத்து தான் எழுதிய பாடலை, இளையராஜ இசையில் பாடினார். நாயகன் படத்தின் நிலா அது வானத்து மேலே பாடலின் இசையை இதற்கு பயன்படுத்தினர். 

இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா தனுஷூடன் பேசும்போது, என்னோட இசையில் விடுதலை படத்தில் நீ பாடிய பாட்டு என்ன ராகம்ன்னு தெரியுமா? என இளையராஜா கேள்வி கேட்க,  "தேனுக்க" ராகம் என்று தனுஷ் பதில் அளித்தார்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Sung Lullaby song for his sons at Ilaiyaraaja concert

People looking for online information on Dhanush, Ilaiyaraaja, Lingaa will find this news story useful.