"ஹீரோவா இவரு?".. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரசிக்க வைக்கும் CLASS ஆன டிரெய்லர் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. 'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சன்டிவியில் ஒளிபரப்பாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி உள்ளது. தனுஷ் & பிரகாஷ் ராஜ் இடையேயான மகன் தந்தை மோதல் காட்சிகள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளன. தனுசுடன் பிரியா பவானி சங்கர் & ராஸி கண்ணா தோன்றும் காதல் காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளன. பாரதிராஜா & தனுஷ் இடையே உள்ள காமெடி காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. நித்யா மேனன் & தனுஷ் இடையே உள்ள நட்பு டிரெய்லரில் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

"ஹீரோவா இவரு?".. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரசிக்க வைக்கும் CLASS ஆன டிரெய்லர் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush sun pictures thiruchitrambalam movie trailer released

People looking for online information on Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna, Thiruchitrambalam will find this news story useful.