தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் பகிர்ந்த சூப்பர் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் புதிய BTS போட்டோவை செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

"பல தடவ சொல்லிட்டோம்.. இதுக்கு அப்புறமும்.." ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் நடித்து வரும் செல்வராகவன் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் விதம் பிடித்துப்போக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பின்னர் யாமினியும் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியதால், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படபிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்தை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உடன் செல்வராகவன் உள்ளார்.

அப்போ பிரபாஸின் PAN INDIA பட ஒளிப்பதிவாளர்.. இப்போ தளபதி 66-க்கு DOP! யார் இந்த கார்த்திக் பழனி

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Starring Naane Varuven Movie BTS Image goes Viral

People looking for online information on Dhanush, Naane Varuven Movie, Naane Varuven Movie BTS Image, Selvaraghavan, Yuvan Shankar Raja will find this news story useful.