"சாமர்த்தியமா இருக்கனும்" - தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் ஆக்சன் மிகுந்த ஜனரஞ்சக டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Advertising
>
Advertising

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தியேட்டர் ரிலீசை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இன்வஸ்டிகேஷன் எனும் புனாய்வு பத்திரிக்கையாளராக தனுஷ் தோன்றி உள்ளார். இவருக்கு ஜோடியாக சக பத்திரிக்கையாளராக நடிகை மாளவிகா மோகனன் தோன்றி உள்ளார். இவர்களுடன் வில்லனாக சமுத்திரக்கனி, தனுஷ் அப்பாவாக ராம்கி நடித்துள்ளனர். ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், நல்ல பின்னணி இசை என டிரெய்லர் ஜனரஞ்சகமாக அமைந்துள்ளது.

"சாமர்த்தியமா இருக்கனும்" - தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் ஆக்சன் மிகுந்த ஜனரஞ்சக டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush starring maaran movie ott trailer release

People looking for online information on Dhanush, Disney Hotstar, Karthick Naren, Maaran, Malavika Mohanan will find this news story useful.