யுவன் பர்த்டே .. பாடிய தனுஷ்.. சிம்பு.. தெறிக்கவிடும் வீடியோ.. எஞ்சாமிகளுடன் தனுஷ் ..VIRAL ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையாராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேக இசை கச்சேரி நேற்று இரவு நடந்துள்ளது.

dhanush simbu arivu dhee yuvan bday trending தனுஷ் சிம்பு

யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் யுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

dhanush simbu arivu dhee yuvan bday trending தனுஷ் சிம்பு

இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டு பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

dhanush simbu arivu dhee yuvan bday trending தனுஷ் சிம்பு

இதில் தீ-உடன் இணைந்து ரவுடி பேபி பாடலை தனுஷ் பாடி அசத்தியுள்ளார். இதேபோல், நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலை பாடியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் இருந்தே தனுஷ் - யுவன் பயணம் ஹிட் அடிக்கத் தொடங்கியது. இதேபோல், சிம்புவின் படங்களுக்கும் யுவனின் இசை முக்கியமானதாக இருந்தது.

இதில் கலந்து கொண்ட ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் பாடகி தீ ஆகியோருடன் தனுஷ் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் தனுஷ், ‘எஞ்சாமிகளுடன்.. எ பில்லியன் அண்ட் ஹாஃப் பிக்சர்’ என கேப்ஷன் போட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ஆம், ‘இந்த புகைப்படத்தை க்ளிக் பண்ணியது சந்தோஷ் நாராயணன்’ என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே ட்வீட் போட்டுள்ளார். இதை அடுத்து ரசிகர்கள் கமெண்டுகளில் யுவன் ஷங்கர் ராஜா உட்பட அனைவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

யுவன் பர்த்டே .. பாடிய தனுஷ்.. சிம்பு.. தெறிக்கவிடும் வீடியோ.. எஞ்சாமிகளுடன் தனுஷ் ..VIRAL ஃபோட்டோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush simbu arivu dhee yuvan bday trending தனுஷ் சிம்பு

People looking for online information on Dhanush, Dhee, Silambarasan TR, Yuvan Shankar Raja will find this news story useful.