நானே வருவேன் படத்தில் தனுஷ் கூட முதன்முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை! வெளியான LATEST UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். 

dhanush selvaraghavan movie update first look poster

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.  இந்த படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. 

dhanush selvaraghavan movie update first look poster

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக சில்லுக்கருப்பட்டி, சாணிகாயிதம் பட ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். 

இன்று இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். பட பூஜையில் இந்துஜா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. 

இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் மூலம் அறிய முடிகிறது. தி ஹேட்ஃபுல் எய்ட், ஜாங்கோ அன் செயிண்ட் போன்ற படங்களின் தாக்கம் போஸ்டரில் தெரிகிறது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush selvaraghavan movie update first look poster

People looking for online information on Dhanush, Selvaraghavan will find this news story useful.