தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் வெளியிட்ட மாஸ் அப்டேட்! சம்பவம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். 

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மாறன் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க போனதால் சில் நாட்கள் நடைபெறாமல் இருந்தது. தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதால், இன்று முதல் மாறன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இதை இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இந்த படத்திற்காக பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Tags : Dhanush, Maaran

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush sathya jyothi maaran movie shooting update

People looking for online information on Dhanush, Maaran will find this news story useful.