போடு வெடிய!!!! வேறலெவல் புகைப்படங்களுடன் வெளியான தனுஷ் - சம்யுக்தா பட ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத் - சென்னை : தனுஷ் - சம்யுக்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.

Dhanush Samyuktha Menon Vaathi Sir Movie Shooting Update
Advertising
>
Advertising

மாறன்

தனுஷ் தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

Dhanush Samyuktha Menon Vaathi Sir Movie Shooting Update

அட... 'வலிமை' டிரெய்லரைப் பார்த்து நம்ம சரத்குமார் செய்த விமர்சனத்தை பாருங்க! வைரல் ட்வீட்!

திருச்சிற்றம்பலம்


தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

வாத்தி

இப்படங்களை தொடர்ந்து தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 முதல் ஆரம்பமாக உள்ளது. இதற்கான ஆரம்ப பட பூஜை இன்று நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அஜித்குமார் நடிக்கும் 'வலிமை' பட பிரான்ஸ் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Samyuktha Menon Vaathi Sir Movie Shooting Update

People looking for online information on சம்யுக்தா, தனுஷ், Dhanush, Samyuktha Menon, Sir Vaathi Movie will find this news story useful.