செம..தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்! இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan : "பொன்னியின் செல்வன்-ல வைரமுத்துவை ஏன் கூப்பிடல..?" - இயக்குநர் மணிரத்னம் சொன்ன பதில்.!

‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள
, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், Tuney John பப்ளிசிட்டி டிசைனராக  பணிபுரிய உள்ளார். இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் & நிவேதிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ஜான் கொக்கன், சுதீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் இளம் நடிகர் மூர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. இவர் மலையாளத்தில் வெளியான காலா (களை) படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு  'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. Madras Regiment-ன் ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்ட நிலையில் தனுஷின் பிம்பம் போஸ்டரில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | 'Vikram' படத்துக்காக லோகேஷ் போட்டு வெச்ச Plan.. "ஆனா அது படத்துல நடக்கல".. Karthik Subbaraj ஷேரிங்ஸ்!!

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Priyanka Mohan Captain Miller Movie Cast Update

People looking for online information on Captain Miller Movie, Captain Miller Movie Cast Update, Dhanush, Priyanka Mohan will find this news story useful.